ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று
இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு
கிளம்பியது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும்
இது ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமாகும்.
இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எனினும், விமான ஓட்டியின் திறமையால் எந்த விதமான சேதமும் இன்றி விமானம் உடனடியாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.
எரிபொருள் தீப்பிடித்து எஞ்சின் ஒன்று எரியத் தொடங்கியதும் பயணிகளிடத்தில் பதற்றம் தோன்றியது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருக்க விமானி திறமையாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் தரையிறக்கினார் என்று இந்த விமானத்தில் பயணம் செய்த ஜேசன் கிரிமெட் என்பவர் தெரிவித்தார்.
என்ஜினில் பற்றிய தீ விமானியால் அணைக்கப்பட்டு பரவாமல் தடுக்கப்பட்டது என்றும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்பு சேவை அந்த விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தது என்றும் விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
மேலெழுந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து தீப்பிழம்புகள் தென்பட்டதும் மோசமான விபத்தாக இருக்கும் என்று தான் அஞ்சியதாக உள்ளூர் வானொலி நிலையத்திற்குத் தகவல் கொடுத்த சாட்சி ஒருவரும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment