பெங்களூரில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் வைத்து, பெண் தாக்கப்பட்டு, பணம்
கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை
ஏற்படுத்தி உள்ளது. சென்னையிலும் வங்கி ஏ.டி.எம். மையங்களில் இதுபோல்
கொள்ளைச்சம்பவங்கள் நடக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே சென்னை நீலாங்கரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் எந்திரத்தை உடைத்து, லட்சக்கணக்கில் பணம் கொள்ளைபோனது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில், லட்சக்கணக்கான பணத்துடன், எந்திரத்தையே பெயர்த்து எடுத்துச் சென்று விட்டனர்.
அந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்பட வில்லை. சென்னை ஐஸ்-அவுசில் கூட ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. தற்போது பெங்களூரில் பெண் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளதால், சென்னையில் ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
வங்கி ஏ.டி.எம். மையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலாளிகளை நியமிக்க வேண்டும். இணையதள தொடர்புடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை, ஏ.டி.எம். மையத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்டிப்பாக நிறுவ வேண்டும்.
மேலும் ஏ.டி.எம். மையங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பணத்தை எடுத்து செல்லும்போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செல்ல வேண்டும். அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லையில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் சென்று பார்வையிட்டு, கண்டிப்பாக காவலாளிகளை நியமிக்க வங்கி நிர்வாகத்திற்கு எடுத்துரைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரோந்து போலீசாரும் அடிக்கடி ஏ.டி.எம். மையம் உள்ள இடங்களில் சென்று கண்காணிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையில் 4 ஆயிரம் ஏ.டி.எம். மையங்களும், தமிழகம் முழுவதும் சுமார் 22 ஆயிரம் ஏ.டி.எம். மையங்களும் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜமும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், வங்கி ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலாளிகள் தூங்காமல் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், போலீசார் நேரடியாக சென்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

No comments:
Post a Comment