பிரபல ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவான்டாஸ், சமீப காலமாக விமான எரிபொருள்
செலவு உயர்வு, மானியம் பெறுவதில் விமான நிறுவனங்களுக்கிடையேயான கடுமையான
போட்டி ஆகியவற்றின் காரணமாக கடனில் சிக்கித்தவித்து வருகிறது.
இந்நிலையில், குவான்டாஸ் நிறுவனம் தனது இடைக்கால நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டடுள்ளதாக இதில் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் குவான்டாஸ் நிறுவனம் தன்னுடைய செலவுகளை சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவிற்கு குறைக்கவிருப்பதால் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை நீக்க வாய்ப்புள்ளதாக சிட்னியை சேர்ந்த செய்தி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்நிறுவனம் இந்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

No comments:
Post a Comment