உலகம் முழுவதும் மக்களிடம் அலை அலையாய் புற்றுநோய் பரவி வருவதாக உலக
சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக புற்றுநோய் மக்களை
பாதிக்காமல் இருக்க மது மற்றும் சர்க்கரை உபயோகத்தை கட்டுப்படுத்த
நடவடிக்கை எடுக்கவேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.
2035ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 24 மில்லியனை எட்ட வாய்ப்புள்ள நிலையில் முறையான நடவடிக்கை எடுத்தால் அதை பாதியாக குறைக்க முடியும் என சுகாதார மையம் தெரிவித்துள்ளது. புற்றுநோயை தடுக்கும் நோக்கில் புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதே தற்போது உலகின் முன் உள்ள உண்மையான தேவையாகும் என மையம் கூறியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனை எட்டியுள்ள நிலையில் 2025ல் அது 19 மில்லியனாகவும், 2030ல் 22 மில்லியனாகவும், 2035ல் 24 மில்லியனாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

No comments:
Post a Comment