பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன்
இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட்
படங்களில் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட ஹாப்மேன் அப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவரை பற்றிக் கொண்ட போதை அரக்கனிடம் இருந்து அவரால் மீள முடியவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாப்மேன் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, மறைந்த ஹாப்மேனின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த எண்கள், அவரது இ-மெயில் தொடர்புகள் ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்த நியூயார்க் நகர போலீசார், அவற்றின் அடிப்படையில் பிரபல ஹெராயின் மொத்த வியாபாரிகள் 4 பேரின் ரகசிய இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஏராளமான போதைப் பொருட்களும், இதர வியாபாரிகள் தொடர்பான விபரங்களும் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment