உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர்
யனுகோவிச் பதவியிறக்கம் செய்யப்பட்டது பனிப்போர் காலத்திய கிழக்கு, மேற்கு
பிரிவினைகளை வெளிப்படுத்தியது என்ற தகவலை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு
நாடுகளுமே நேற்று மறுத்துள்ளன.
ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் உள்ள அதிகார யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களின் வெளிப்பாடே உக்ரைனில் காணப்படும் அரசியல் நிலைமை என்பதை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலரான வில்லியம் ஹேகும் நிராகரித்தனர்.
மேலும், உக்ரைனின் மக்கள் அமைதியாக தங்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து அந்நாட்டிற்கு உதவ வேண்டும் என்று இருவருமே வலியுறுத்தினர். ஜனநாயக அரசிற்கான தங்களுடைய விருப்பங்களை வெளிப்படையாகப் பேசிய உக்ரைன் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய கடமைப்பட்டுள்ளதாக ஜான் கெர்ரி கூறினார்.
இது கிழக்கு, மேற்கு நாடுகளுக்கான பூஜ்ய வட்ட விளையாட்டு அல்ல. மேலும், உக்ரைனின் தற்போதைய நிலவரம் ரஷ்யா, அமெரிக்கா போன்ற எந்த நாடுகளின் தேர்வும் அல்ல. இது முழுக்க, முழுக்க உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காகச் செயல்படுவது ஆகும். இன்று முதல் அமைதியான தீர்வு கிடைக்க அனைவருமே இணைந்து பணி புரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஹேகும் இந்த கருத்துகளுக்கு ஒத்த கருத்துகளையே வெளியிட்டார். பாலியல் வன்முறை குறித்த ஒரு அரசுத்துறை கருத்தரங்கில் பேச வந்த இருவரும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான உக்ரைனை மேற்கத்திய அல்லது ரஷ்ய சார்பு பகுதிகளாகப் பிரிக்க தங்கள் நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

No comments:
Post a Comment