பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா
எம்.பி.க்கள் கடும் அமளி செய்தனர். மிளகுப்பொடி வீசப்பட்டதால் சபை ஒத்தி
வைக்கப்பட்டது.
இதையடுத்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க.வின் உதவியை காங்கிரஸ் தலைவர்கள் நாடினார்கள். அப்போது தெலுங்கானா மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும், சீமாந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக்கொண்டதுபோல இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் கோஷமிட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, தெலுங்கானா மசோதா மீது எம்.பி.க்கள் கருத்தை கேட்கவும், விவாதம் நடத்தவும் பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, எம்.பி.க்கள் ஏற்கனவே கூறியுள்ள சுமார் 67 திருத்தங்களை செய்ய மத்திய அரசு முன்வந்தது. திருத்தங்களுடன் கூடிய மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது.
அப்போது சீமாந்திரா மக்களின் கவலைகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தியது. இதற்கு பதிலளித்த உள்துறை மந்திரி ஷிண்டே, சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.க்கள் அவைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை சபை காவலர்கள் வெளியேற்றினர்.
இந்த அமளிக்கிடையே மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. இதனால் திருத்தங்களுடன் கூடிய தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மக்களவையின் கதவுகள் மற்றும் பார்வையாளர் கேலரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment