மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை மீனவ பிரதிநிதிகள் விரைவில்
பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இரு நாட்டு சிறைகளிலும் உள்ள
மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கை சிறையில் இருந்த காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் 52 பேர் விடுதலை செய்யப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். மேலும், பல மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களின் நீதிமன்றக் காவலை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment