Friday, 3 January 2014

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர சட்டசபையில் கடும் அமளி

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா மீதான விவாதம் இன்று தொடங்குவதாக இருந்தது. சபை கூடியதும் ஆந்திர மாநில பிரிவினை குறித்து கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வற்புறுத்தினர்.
http://www.maalaimalar.com/2014/01/03124944/Telangana-issue-AP-Assembly-he.html


சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்தார். உடனே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்குதேசம், ஒஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம். எல்.ஏ.க்கள் சபாநாயகர் நாதெல்லா மனோகரனை முற்றுகையிட்டு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து சபையை 30 நிமிடம் சபா நாயகர் ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment