புதுவையில் மத்திய மந்திரி நாரயாணசாமி வீட்டில் கிடந்த பைப் வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினார்கள்.இந்த
சம்பவம் பற்றி அறிந்ததும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், மாநில
காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள்
மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் மத்திய மந்திரி நாராயணசாமி வீட்டு முன்பு
திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அண்ணாசிலைக்கு வந்தனர். மத்திய மந்திரி நாராயணசாமி வீட்டு முன்பு பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் அண்ணா சிலையை சுற்றி 4 ரோட்டிலும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி அண்ணா சாலை மற்றும் புஸ்சி வீதியில் கடைகள் அடைக்கப்பட்டன. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டசபை எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெடிகுண்டு வைத்தவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதனை ஏற்று காங்கிரசார் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தை காங்கிரசார் கைவிட்டாலும் தொடர்ந்து மத்திய மந்திரி நாரயாணசாமி வீட்டு முன்பு குழுமி இருந்தனர்.

No comments:
Post a Comment