Thursday, 2 January 2014

காற்றழுத்த நிலை வலுப்பெற்றது: கடலோர தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.


அது தென்கிழக்கு அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment