போதை மருந்து விற்பனையில் தொடர்புள்ளதாக கூறப்படும் உகாண்டா நாட்டு பெண்ணை உள்ளடக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களை கைது செய்யும்படியும் டெல்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி உத்தரவிட்டார். இதனை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, கடமையைச் செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று போராட்டத்தை தொடங்கியுள்ள முதல்வர் கெஜ்ரிவால் 10 நாட்கள் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதேசமயம் தனது அலுவலக பணிகளும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடக்கும் இடத்திலேயே அனைத்து கோப்புகளையும் வரவழைத்து பரிசீலித்து முடிவெடுக்க உள்ளதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment