2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு
சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு
செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின்
கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது.
இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.
இந்த நிலையில் நேற்று 9-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெஸ்லின் தபலோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காயுடன் ஆடிய ஆனந்த் 57-வது நகர்த்தலில் தபலோவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிக்கனியை பறித்தார்.
இதுவரை தோல்வியே சந்திக்காத ஆனந்த்துக்கு இது 3-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா வீரர் லெவோன் ஆரோனியனுக்கு, ஷக்ரியர் நேம்ட்யாரோவ் (அஜர்பைஜான்) அதிர்ச்சி அளித்தார். 9 சுற்று முடிவில் ஆனந்த் 6 புள்ளியுடன் மீண்டும் தனி முன்னிலை பெற்றுள்ளார். ஆரோனியன் 5 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

No comments:
Post a Comment