கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்தின் போது, உறவினர்கள்,
நண்பர்களுக்கு ‘கேக்’ கொடுப்பது வழக்கம். ஒருவருக்கொருவர் அன்பு
பரிமாற்றத்தின் அடையாளமாக ‘கேக்’ இடம் பெறுகிறது. சென்னையில் பல்வேறு
வகையான கேக்கு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
இது தவிர அன்பளிப்பாக வழங்கும் வகையில் அட்டை பெட்டிக்குள் அடைத்தும் விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கேக் விலை உயர்ந்துள்ளது. கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. கேக்கிற்கு பயன்படுத்தப்படும் முட்டை, மைதா, எண்ணை ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கிலோ ரூ.250, ரூ.300 ஆக இருந்த கேக் வகைகள் இந்த ஆண்டு ரூ.400 முதல் ரூ.650 வரை விற்கிறது.
இது குறித்து புரசைவாக்கத்தில் உள்ள ‘‘ஒயிட் பீல்டு’’ கேக் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் வி.எம்.மொய்தீன் கூறியதாவது:–
இந்த கடை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 50 வருடமாக சிபத்துல்லா என்பவர் நடத்தி வருகிறார். கேக் விற்பனையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற பழமையான கடை இது.
இந்த ஆண்டு கேக் விலை சற்று உயர்ந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததால் தயாரிப்பு செலவு அதிகமாகி உள்ளது. ஆனாலும் எங்கள் கடையில் தரமான கேக் வகைகள் மற்ற கடைகளை விட குறைவாகவே விற்கிறோம்.
வெண்ணிலா கேக் கிலோ ரூ.250, பிஸ்தா, சாக்லேட், பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் நட் வகை கேக்குகள் கிலோ ரூ.300 வால்நட்கேக், பிளம்கேக் மற்றும் டீ கேக் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேன் கேக் ஒன்று ரூ.15க்கும், பிளம் கேக் ஒன்று ரூ.15–க்கும் கிடைக்கிறது.
புல்சாக்லேட் கேக் கிலோ ரூ.350 விற்கப்படுகிறது. ஆர்டர்களும் ஏற்றுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment