ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நேற்று 5 மணி நேர விவாதத்திற்கு பிறகு
மாநிலங்களவையில் நிறைவேறியது. சமாஜ்வாடி கட்சியைத் தவிர மற்ற கட்சிகள்
அனைத்தும் இம்மசோதாவுக்கு ஆதரவு அளித்தன.
இதையடுத்து திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மக்களவையில் இன்று தாக்கல்
செய்யப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு பிறகு இதன் மீதான விவாதம்
தொடங்கியது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்,
காங்கிரஸ், பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.
அதன் பின்னர் நடைபெற்ற குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானவுடன், ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த அன்னா ஹசாரே மகிழ்ச்சி அடைந்தார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது, விரைவில் இது சட்டமாக வெளியிடப்படும் என நம்புவதாகவும், இதில் திருத்தங்கள் மேற்கொண்ட தேர்வுக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மசோதாவை கொண்டு 100 சதவிகித ஊழலை கட்டுப்படுத்த முடியாது என்றும், ஆனால் 50 சதவிகிதமாவது கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக தாம் ஏற்கனவே கூறியுள்ளதாக ஹசாரே மேலும் தெரிவித்தார்.
பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். பள்ளி குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகிய ஹசாரே, 9 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

No comments:
Post a Comment