ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு ஆளும் காங்கிரஸ்
உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. புதிய
மாநிலம் உருவானால், பல்வேறு எம்.பி.க்களுடன் கட்சியை விட்டு வெளியேற
முதல்வர் கிரண்குமார் ரெட்டி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தெலுங்கானா
விவகாரத்தால் பாராளுமன்றத்தில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில், தெலுங்கானாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீமாந்திரா பகுதியில் உள்ள 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தனர்.
இதேபோல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது போராட்டம் மக்களை சென்றடைய புதிய திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி, மாணவர்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்த உள்ளார். மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுக்கூட்டங்களும் நடத்தப்படும்.

No comments:
Post a Comment