வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால்
தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து
வருகிறது. நாகர்கோவில், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, சுருளோடு,
முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை
பெய்தது.
முள்ளாங்கினாவிளையில் அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையோர பகுதியான பாலமோரில் பலத்த மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 196 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.80 அடியாகவும், சிற்றார்–1 அணை நீர்மட்டம் 12.79 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 12.89 அடியாகவும், மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 51.02 அடியாகவும் உள்ளது. நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர் மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது. மொத்தம் 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவை.
மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டாரில் வருமாறு:–
பேச்சிப்பாறை, 12.2, பெருஞ்சாணி 2.8, சிற்றார்1–9.8, சிற்றார்2 –6.8, ஆனைக்கிடங்கு–2, குளச்சல் 4.6, முள்ளாங்கினாவிளை 15, புத்தர்அணை 2.6, நாகர்கோவில் 5.1, பூதப்பாண்டி, 8, கன்னிமார் 8.3, ஆரல்வாய்மொழி 7, பாலமோர் 8.2, மயிலாடி 1.5.
வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மீனவ துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் ‘குமரி மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என கூறி உள்ளனர்.மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

No comments:
Post a Comment