Tuesday, 29 April 2014

ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு கிளம்பியது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் இது ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமாகும்.


இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எனினும், விமான ஓட்டியின் திறமையால் எந்த விதமான சேதமும் இன்றி விமானம் உடனடியாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. 

எரிபொருள் தீப்பிடித்து எஞ்சின் ஒன்று எரியத் தொடங்கியதும் பயணிகளிடத்தில் பதற்றம் தோன்றியது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருக்க விமானி திறமையாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் தரையிறக்கினார் என்று இந்த விமானத்தில் பயணம் செய்த ஜேசன் கிரிமெட் என்பவர் தெரிவித்தார். 

என்ஜினில் பற்றிய தீ விமானியால் அணைக்கப்பட்டு பரவாமல் தடுக்கப்பட்டது என்றும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்பு சேவை அந்த விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தது என்றும் விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மேலெழுந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து தீப்பிழம்புகள் தென்பட்டதும் மோசமான விபத்தாக இருக்கும் என்று தான் அஞ்சியதாக உள்ளூர் வானொலி நிலையத்திற்குத் தகவல் கொடுத்த சாட்சி ஒருவரும் குறிப்பிட்டார்.

Monday, 21 April 2014

தென்னாப்பிரிக்காவின் உயரிய கவுரவத்துக்கு 5 இந்தியர்கள் தேர்வு

தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று வீரதீர செயல்களையும், பெரும் தியாகத்தையும் புரிந்தமைக்காக தென்னாப்பிரிக்க இந்தியர்கள் 5 பேருக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’, ‘தி ஆர்டர் ஆஃப் லுத்துலி’ மற்றும் ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.


இந்த விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்தம் 54 பேரில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த இந்த ஐவரும் இடம்பெற்றுள்ளனர்.

அநீதியான அடக்குமுறைகளை மக்களின் மீது திணித்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி, சுதந்திர தென்னாப்பிரிக்கா அமைய உழைத்த இந்த்ரெஸ் நாயுடு, ஷிரிஷ் நானாபாய், ரெக்கி வாண்டையார் ஆகியோருக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’ விருதுகள் வழங்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் தேசிய கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக உழைத்த அப்துல்ஹே ஜசாத்துக்கு ‘தி ஆர்டர் ஃபார் லுத்துலி’ விருதும், மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியையாக இருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை புரிந்த பிரிடோரியா தாவரவியல் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான நம்ரீதா லால் என்ற பெண்ணுக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ விருதும் வழங்கப்படுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டோரியாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கி தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா வாழ்த்துரை ஆற்றுகிறார்.

சர்வாதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்கு துணை நின்றமைக்காக மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘காந்தி’ என்ற ஆங்கில திரைப்படமாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் ‘லார்ட்’ ரிச்சர்ட் அட்டன்பரோ, அமெரிக்க திரையுலகை சேர்ந்த டேன்னி க்லோவர் மற்றும் குவின்சி ஜோன்ஸ் ஆகியோருக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

Wednesday, 16 April 2014

சனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தில் இருந்து புதிய துணை கிரகம் உருவானது குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டுள்ளது.


சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில் மிகச்சிறிய ஒரு துணை கிரகம் சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது. அது ‘ஐஸ்’ கட்டி போன்று ‘பள பள’ வென இருக்கிறது.

அந்த துணை கிரகம் 1200 கி.மீட்டர் நீளமும், 10 கி.மீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு துணை கிரகத்தை சனி கிரகத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் களிமுர்ரே தெரிவித்துள்ளார்.

இந்த துணை கிரகத்துக்கு ‘பொக்கி’ என பெயரிட்டுள்ளனர். புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்

Tuesday, 25 March 2014

மூழ்கிய மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்க வீரர்கள் வருகிறார்கள்

இந்திய கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை கண்டு பிடித்து மீட்க முடியுமா? என்ற கருத்து நிலவுகிறது.


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8–ந்தேதி 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 2 மணி நேரத்தில் தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது, நடுவானில் மாயமானது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை இந்தியா, அமெரிக்கா உள்பட 26 நாடுகள் தீவிரமாக தேடி வந்தன. போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதை தேடி வந்தன.

ஆனால் அது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் பேரில் 17 நாட்களுக்கு பிறகு அந்த விமானம் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2500 கி.மீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதன்மூலம் மாயமான மலேசிய விமானம் குறித்த தகவல் 17 நாட்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது உடைந்து விழுந்து நொறுங்கிய விமானம் கடலுக்குள் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கிடப்பது தெரியவந்தது. கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏனெனில் அதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்காவிடம் தான் உள்ளது.

அந்த கருவியின் உதவியால் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என ‘பென்டகன்’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகள் (சிக்னல்) உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்காவின் 7–வது கப்பல்படை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இப்பணியில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்த உள்ளனர். கருப்பு பெட்டியின் பேட்டாரி தற்போது செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Monday, 24 March 2014

உலக சதுரங்க தகுதி சுற்று: ஆனந்த் அபாரம்

2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது.


இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

இந்த நிலையில் நேற்று 9-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெஸ்லின் தபலோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காயுடன் ஆடிய ஆனந்த் 57-வது நகர்த்தலில் தபலோவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிக்கனியை பறித்தார்.

இதுவரை தோல்வியே சந்திக்காத ஆனந்த்துக்கு இது 3-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா வீரர் லெவோன் ஆரோனியனுக்கு, ஷக்ரியர் நேம்ட்யாரோவ் (அஜர்பைஜான்) அதிர்ச்சி அளித்தார். 9 சுற்று முடிவில் ஆனந்த் 6 புள்ளியுடன் மீண்டும் தனி முன்னிலை பெற்றுள்ளார். ஆரோனியன் 5 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

Friday, 21 March 2014

மலேசிய விமானத்தின் பாகத்தை தேடிச் சென்ற ஆஸ்திரேலியாவிற்கு ஏமாற்றம்


239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்புரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்க்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந் தேதி திடீரென மாயமானது தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. அதையடுத்து 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது வியட்நாம் அருகே புகுவாக் தீவு அருகே கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக தகவல் வெளியாகின.


எனவே அந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமாகி 2 வாரங்களாகயும் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.எனவே, விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் குடும்பத்தினர் தீராத கவலை மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே மாயமான விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 2 பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கி.மீட்டர் தொலைவில் அவை கடலில் மிதப்பதை செயற்கைக் கோள் படம் காட்டிக் கொடுத்தது.

24 மீட்டர் (78 அடி) நீளம் கொண்ட அந்தப் பொருள் பல்லாயிரம் மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீரில் மேலே அடித்து வரபட்டதாக கருதப்பட்டது.எனவே, இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மாயமான விமானத்தின் சிதைவுகளை கண்டறிய ஆஸ்திரேலியாவின் 5 கப்பல்கள் விரைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் செயற்கைக் கோள் படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகமா? என்பதை உறுதி செய்ய ஆய்வும் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், இந்த ஆய்வில் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக, இன்று பேட்டியளித்த ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் டிரஸ், ‘அப்பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஏதோ ஒன்று இப்போது அங்கு மிதக்கவில்லை. அது கடலின் அடியில் மூழ்கி மறைந்திருக்கலாம்’ என்று தெரிவித்தார்.

Thursday, 20 March 2014

மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?: ஆஸி. தகவல்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துபோனது. பல நாடுகளும் மாயமான இந்த விமானம் குறித்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோதும் நேற்றுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் ஒன்றில் இந்தியப் பெருங்கடலில் இரண்டு துண்டுகள் மிதப்பது போன்ற காட்சி தென்பட்டுள்ளது. இதனால் அவை மலேசிய விமானத்தின் துண்டுகளாக இருக்கலாம் என்ற ஐயத்தினை உறுதி செய்துகொள்ள விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் இன்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியக் கடல் பாதுகாப்பு ஆணையத்திற்கு (ஏஎம்எஸ்ஏ) கிடைத்துள்ள தகவலின்படி தெற்கு இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் இரண்டு பொருட்கள் காணாமற்போன விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிடமும் பேசியதாகத் தெரிவித்த அவர் இந்தத் துண்டுகள் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் பணி கடுமையானதாக இருக்கும். இறுதியில் அவை விமானத்தைச் சேர்ந்தவையாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் கூறினார்.

முன்னதாக அனுப்பப்பட்ட விமானத்தைத் தொடர்ந்து இன்னும் மூன்று விமானங்களும் இந்தப் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல் பற்றிய செய்தியாளர் கூட்டமொன்றும் கான்பெர்ராவில் நடத்தப்படும் என்று ஏஎம்எஸ்ஏ தெரிவித்துள்ளது.

லாவோசிலிருந்து காஸ்பியன் கடல் வரையிலான வடக்குப் பகுதியிலும், மேற்கே இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியிலுமான இரு பிரிவுகளாக இந்தத் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் தென்பகுதியில் ஆஸ்திரேலியா அமெரிக்க கப்பற்படையின் துணையுடன் முன்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Wednesday, 19 March 2014

மலேசிய விமானம் மாயம்: காப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

கடந்த 8-ந்தேதி அதிகாலை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மாயமானது. இதுவரை காணாமற்போன அந்த விமானம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எம்எச்-370 எண்ணுடைய போயிங் 777-200 ஈஆர் என்ற காணாமற்போன பயணிகள் விமானத்தின் காப்பீட்டு தரகர் வில்லிஸ் என்றும் காப்பீட்டு நிறுவனம் தங்களுடையது என்று அலையான்ஸ் நிறுவனம் சென்றவாரம் தெரிவித்தது.


மலேசியா விமானத்திற்கான அலையான்ஸ் குளோபல் கார்பொரேட் & சிறப்பு நிறுவனமும் மற்ற இணை மறுகாப்பீடுகளும் தங்களுடைய முதல்கட்ட காப்பீட்டுத் தொகையை அளிக்கத் தொடங்கியுள்ளதாக இந்நிறுவனம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காப்பீட்டுத் தரகர் வில்லிஸ் உடனான ஒப்பந்தமும், சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படும் வர்த்தக சந்தை நடைமுறையும் ஆகும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. காப்பீடு செய்யப்பட்ட விமானத்தைக் காணவில்லை எனும்போது மேற்கொள்ளப்படும் எங்களுடைய ஒப்பந்த நடைமுறைகளுக்கான செயலில் இதுவும் ஒன்றாகும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமற்போன விமானத்திற்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சேர்த்து அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 100 மில்லியன் யூரோவைத் தாண்டும் என்று ஜெர்மனியின் வணிக ஏடான ஹான்டல்ஸ்பிலாட் முன்னர் தெரிவித்திருந்தது.

இந்தத் தொகையில் மறு காப்பீட்டு நிறுவனங்கள அளிக்க வேண்டியது எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க அலையான்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

Tuesday, 18 March 2014

தாய்லாந்தில் அவசர நிலைப் பிரகடனம் ரத்து

தாய்லாந்தின் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா, கடந்த 2006-ம் ஆண்டில் அங்கு பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தக்ஷின் ஷினவத்ராவின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கூறி அவரையும் பதவி இறங்கக் கோரி எதிர்க்கட்சியினரின் போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.


அதிகரித்த போராட்டங்களால் பதவி இறங்கினாலும் காபந்து பிரதமராகத் தொடர்ந்த இங்க்லக் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பலத்த எதிர்ப்புக்கிடையே அங்கு பொதுத் தேர்தலை நடத்தினார்.

பல தொகுதிகளில் வோட்டுப்பதிவு தடை செய்யப்பட்ட நிலையில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றாலொழிய முடிவுகளை அறிவிக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

இங்க்லக் பதவி இறங்கினால்தான் மறுதேர்தல் நடைபெறும் என்று கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சியினர் தலைநகர் பாங்காக்கில் முற்றுகைப் போராட்டங்களைத் துவக்கினர்.இந்தக் கலவரங்களில் நடைபெற்ற துப்பாக்கி சூடுகளிலும், கையெறி குண்டுகளின் தாக்கத்திலும் 23 பேர் பலியாக நேர்ந்தது.

இதனைததொடர்ந்து தலைநகர் பாங்காக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது.  தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் குறைந்து இணக்கமான சூழல் நிலவுவதால் பாங்காக்கிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவசர நிலை உத்தரவை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதிலாக வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்படும் என்று தேசிய பாதுகாப்புத் தலைவர் பரடோர்ன் பட்டநாத்புட்டூர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவினை பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது பொது செயலாளர் சுரானந் வெஜ்ஜஜிவா குறிப்பிட்டுள்ளார்.

Monday, 17 March 2014

ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்க தாழ்வாக பறந்த விமானம்


239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்விமானம் குறித்து நாள்தோறும் புதுப்புது சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக ஓட்டிச்சென்றிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியானதையடுத்து, அந்த கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.


இது தொடர்பாக மலேசிய அதிகாரிகள் இன்று கூறுகையில், “ரேடாரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு சுமார் 8 மணிநேரம் விமானம் பறந்துள்ளது. வங்காள விரிகுடாவின் மேற்பகுதியில் பறந்தபோது தான் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன்பின்னர் ரேடார் பார்வையில் படாமல் 3 நாடுகளின் மேலே பறந்திருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தையும் அதன் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளையும் நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும். மலைப்பாங்கான பகுதிகளில் 5000 அடிக்கு கீழ் விமானத்தை தாழ்வாகப் பறக்க செய்து ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.

விமானம் எங்காவது தரையிறங்கி அதன் என்ஜின் செயலிழந்து போயிருக்கலாம் அல்லது தரையில் மோதியிருக்கலாம். இதுபோன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

மிகவும் ஆபத்தான இந்த தொழில்நுட்பத்தை ராணுவ பைலட்டுகள், தங்கள் இலக்குகளை ரகசியமாக சென்று கண்காணிப்பதற்காக பயன்படுத்துவார்கள்.

Thursday, 13 March 2014

Gul Panag

New Delhi: Gul Panag has a travelled a long way since hitting the spotlight in 1999, when she won the Miss India beauty pageant. A stint in the world of fashion and cinema followed soon after. Her Bollywood sojourn saw her acting in films like Dor, which were critically acclaimed, but her career stalled. The 35-year-old, also a fitness enthusiast, is very active on Twitter, with some 8 lakh followers. She has now decided to take the aam aadmi route to enter the dirt and grime of politics.

Gul, whose father Lt. Gen (Retd.) H S Panag is one of the founding members of the Aam Aadmi Party, today joined Arvind Kejriwal's outfit, and is set to be declared as its candidate from the Chandigarh Lok Sabha seat. She will replace Savita Bhatti, widow of popular satirist-cum-actor, the late Jaspal Bhatti, who pulled out of the race earlier this week.

Gul hit the campaign trail even before her name was formally declared by Mr Kejriwal's party. "Chandigarh is my home. I was born and brought up in Chandigarh. Like you, I also want an atmosphere of clean politics. That is why I have joined this. It is my humble request to all of you to become a member of this movement,'' she told reporters while campaigning in the city. Sporting the trademark AAP cap and dark glasses, the model-turned-actor-turned-politician mingled freely with the crowd, seeking their support to enter Parliament

Gul is expected to take on former union minister Pawan Kumar Bansal, a three-term Congress heavyweight, whose candidature has reportedly been cleared by the Congress election committee.  Mr Bansal, 65, had to resign from the Union Cabinet in May after his nephew Vijay Singla was arrested for allegedly accepting bribe to facilitate a plum posting for a senior official in the Railways. A CBI probe, however, gave a clean chit to Mr Bansal two months later, citing lack of evidence.

Indian ships joins operation to locate the missing Malaysia Airlines plane


New Delhi:  Two Indian ships from the Andaman and Nicobar Islands were today deployed to locate the missing Malaysia Airlines plane that disappeared from radar screens last Saturday, nearly an hour after it took off from Kuala Lumpur. (Missing Malaysia Airlines plane's pilots under scrutiny after mystery)

The Defence Ministry has also ordered that more aircraft and helicopters will be deployed for the search operation that involves a dozen countries. India's latest long-range maritime reconnaissance planes, Boeing P 8i, will also join the search.

India is likely to begin looking for the aircraft in the area east of Campbell Bay. Air Marshal PK Roy, Commander-in-Chief of the Andaman Nicobar Command will coordinate the operations.

On Wednesday, a Dornier aircraft belonging to India's coastguard set off to search the eastern side of the Andaman Islands, but found nothing.

The Malaysia Airlines Boeing 777, with 239 people on board, vanished from air traffic control screens midway between Malaysia's east coast and Vietnam. Its fate remains a mystery and no wreckage has been identified.

The search involves a dozen countries and has been widened to the Andaman Sea, to the west of the Malaysian peninsula. US investigators suspect that the aircraft flew for some four hours after its last confirmed location, the Wall Street Journal reported. But Malaysia's Transport Minister has said the reports are not true.

31 killed in tanker explosion in China


    From K J M Varma

  Beijing, Mar 13 (PTI) At least 31 people have been killed and nine others missing in a truck collision and resulting explosion in north China, authorities said today.
   
The accident took place in Shanxi Province on March 1 when two tankers loaded with methanol - a poisonous and flammable liquid often used as a fuel - ran into each other inside a highway tunnel.
   
The blast shook the Yanhou Tunnel of the highway linking Shanxi's Jincheng City and Jiyuan City in Henan Province.
   
Investigators today said leakage from the two crashed methanol tankers killed at least 31 people, with nine still missing, state-run Xinhua news agency reported.
  
 Police investigating the site initially said the explosion damaged 42 vehicles in the tunnel, making it difficult to confirm the number of deaths.
   
The death toll was updated at a meeting in Jincheng City held by an investigation group sent by China's State Council.


Tuesday, 11 March 2014

மாயமான மலேசிய விமானம்: நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலம்

239 பயணிகளுடன் கடந்த 8-ம் தேதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.

சீனா மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் கடந்த 2 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் அந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம். அல்லது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்பது உள்பட பல்வேறு யூகங்கள் மேலோங்கி வரும் நிலையில், அந்த விமானத்தின் இறுதி நிமிடங்களை நேரில் பார்த்த சிலர் பேட்டியளித்துள்ளனர்.

மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணியளவில் வானத்தில் பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியதாக தெரிவித்துள்ளார்.சாதாரணமாக விமானத்தின் முகப்பு விளக்குகள் வானத்தில் உள்ள சிறிய நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கும்.

ஆனால், நான் பார்த்த பிரமாண்டமான தீப்பிழம்பு மேகங்களின் பின்னணியில் சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. சில வினாடிகளுக்குள் தாய்லாந்து கடல் எல்லை நோக்கி நகர்ந்து சென்று, திடீரென்று மறைந்து விட்டது என்று கூறும் இவர், சாதாரணமாக தனது வீட்டின் மேல் உள்ள வான்வழியில் அன்றாடம் பல விமானங்கள் கடந்து செல்வதாகவும், சம்பவத்தன்று பார்த்த விமானம் சராசரி பாதையை விட்டு விலகிச் சென்றதை கவனிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது வீட்டில் இருந்து தெற்கே சுமார் 100 மைல் தொலைவில் வாழும் மீனவரான ஆஸித் இப்ராகிம் என்பவரும் அப்துல் ஹாதியின் வீடு இருக்கும் திசையை சுட்டிக்காட்டி, தீப்பற்றி எரிந்தபடி பறந்த ஒரு விமானம் தென்னந்தோப்பின் பின்புறமாக மறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாயமான விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணித்த 4 பேரில் ஒருவர் ஈரான் நாட்டை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.மேலும், அந்த விமானத்தில் சென்ற 11 பேரின் ‘ஸ்மார்ட் போன்’கள் இன்னும் இயங்கிக் கொண்டுள்ளன என அவர்களின் உறவினர்கள் பேட்டியளித்துள்ளனர்.

Monday, 10 March 2014

கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் சற்று முன்னர் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு கலிபோர்னியா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிர் பயத்தில் வீடுகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து வெளியேறிய அவர்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் யுரேக்கா கடலோரப் பகுதிகளும் நடுங்கியதாக புவியியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Friday, 7 March 2014

அபுதாபி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு: விமான சேவை பாதிப்பு

அபுதாபியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எதிஹாட் விமான நிறுவனம் மற்றும் அதன் மிகப்பெரிய போட்டியாளர்களாகக் கருதப்படும் கத்தார் ஏர்வேஸ், துபாயை மையமாகக் கொண்ட எமிரேட்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து இந்நிறுவனங்களின் பெரும்பான்மையான நெடுந்தொலைவு விமானப் போக்குவரத்துகளின் மையங்களாக வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ஒன்றான அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலும் புதிய முனையம் உட்பட விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த விமான நிலையத்தில் நேற்று காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எதிஹாட் நிறுவனத்தின் பெரும்பாலான விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. சில விமானங்கள் இங்கு தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டபோதிலும் தொழில்நுட்பத் தாமதங்கள் நீடிக்கலாம் என்ற அறிவிப்பும் நேற்று வெளியானது.

தாமதத்திற்கான காரணத்தை அந்த நிறுவனம் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை எனினும், ஐக்கிய அரபுக் குடியரசுப் பகுதிகளில் தற்போது காணப்பட்டுவரும் அடர்ந்த பனிமூட்டமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

Thursday, 6 March 2014

எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றலாம்

சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தபோது பலரும் இதுகுறித்த சந்தேகத்தை எழுப்பினர்.


ஆனால் அதன்பின் கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய் சோதனைகள் நெகடிவ் என்ற முடிவைத் தந்துள்ளன என்றும் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மில்லர் குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் டெபோரா பர்சாத் தெரிவித்துள்ளார்.

நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற எய்ட்ஸ் நோய் கருத்தரங்கு ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்ட ஆய்வாளர்கள் இதுபோன்று இன்னும் ஐந்து வழக்குகள் கனடாவிலும், மூன்று வழக்குகள் தென்னாப்பிரிக்காவிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இன்னும் மூன்று மாதங்களுக்குள் இதே சிகிச்சை முறைகள் சோதனை முறை அடிப்படையில் 50 பச்சிளம் குழந்தைகளிடத்தில் மேற்கொள்ளப்படும் என்று கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.சில வருடங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும்

இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Wednesday, 5 March 2014

உலகில் முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தியவர் மரணம்

இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்பட்டு வருகிறது. அது போன்று இருதயம் கிடைக்க நீண்ட நாள் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது.

 அதை தடுக்க செயற்கை இருதயம் தயாரித்து அதை பொருத்தும் பணியில் பிரேஞ்ச் பயோமெடிக்கல் நிறுவனமான கார்மேட் ஈடுபட்டுள்ளது.அந்த நிறுவனம் தயாரித்த முதல் செயற்கை இருதயம் 76 வயது இருதய நோயாளி ஒருவருக்கு கடந்த டிசம்பர் 18–ந்தேதி பொருத்தப்பட்டது. அது சிறந்த முறையில் இயங்கியது.

எனவே அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி அவரது செயற்கை இருதயம் செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை இருதயம் 75 நாட்கள் மட்டுமே இயங்கி உள்ளது. பொதுவாக இது போன்ற இருதயங்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர். கார்மேட் நிநுவனம் அதை நவீன மயமாக்கி நீண்ட நாட்கள் இயக்கும் வகையில் வடிவமைத்து இருந்தது.

Tuesday, 4 March 2014

மீண்டும் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்

கார்லோசை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பெற்றார். *உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அமெரிக்காவின் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பெற்று இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் 15 முறை நம்பர்–1 இடத்தை தக்க வைத்து இருந்தார்.


இதற்கிடையே, கடந்த ஆண்டில் மெக்சிகோ தொழில் அதிபர் கார்லோன் சிலிம் அவரை முந்தினார். உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற பட்டத்தை தட்டிச் சென்றானர்.

இந்த நிலையில், மீண்டும் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பெற்றார். சமீபத்தில் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சர்வதேச அளவில் பணக்காரர்களை கணக்கெடுத்தது. அப்போது 1,645 ஆண் மற்றும் பெண் கோடீசுவரர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

அதில், பில்கேட்ஸ் மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்த படியாக மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம் 2–வது இடம் பிடித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ. 4 லட்சத்து 46 ஆயிரம் கோடியாகும்.

மைக்ரோசர்ப்ட் நிறுவன பங்குகளின் விலை உயர்வால் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு அதிகரித்துவிட்டது. அதனால் மீண்டும் அவர் நம்பர்–1 இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக் கோடீசுவரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனங்களின் அதிபர் முகேஷ் அம்பானி 18.6 பில்லியன் அமெரிக்க டாலருடன் உலகின் 40-வது பணக்காரராக உள்ளார். அவரது சகோதரர் அனில் அம்பானி 5 பில்லியன் டாலருடன் 281-வது இடத்தில் உள்ளார். லண்டன்வாழ் இந்தியத் தொழிலதிபர் லஷ்மி மிட்டல் 16.7 பில்லியன் டாலருடன் 52-வது இடத்தில் உள்ளார்.

முகநூல் நிறுவனர் மார்க் சூசர்பெர்க் இவ்வருடம் அதிக லாபம் ஈட்டியவர்களி்டத்தில் முதலிடத்தில் உள்ளார். அவரது வருமானம் இந்த ஆண்டு மட்டும் 15.2 மில்லியன் அமெரிக்க டாலரிலிருந்நு 28.5மில்லியன் அமெரிக்கடாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 3 March 2014

திபெத்தியர்களின் ஆர்ப்பாட்டங்களை தடுக்க நேபாள அரசு நடவடிக்கை


சீன ஆட்சிக்கு எதிராக கடந்த 1959-ம் ஆண்டில் திபெத்தில் ஏற்பட்ட புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர்களின் மதத் தலைவரான தலாய்லாமா இந்தியாவில் உள்ள தரம்சாலாவில் தஞ்சம் புகுந்து தனது ஆட்சியை நடத்தி வருகின்றார். இது மட்டுமின்றி அப்போது திபெத்தை விட்டு வெளியேறிய மக்களில் பெரும்பான்மையானோர் நேபாள் நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சீனா தங்கள் நாட்டைப் பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி அடிக்கடி தீக்குளிப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தனி திபெத் கோரிக்கைகாக கடந்த ஆண்டு ஜனவரி வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்தவாரம் அவர்களது போராட்டங்களின் ஆண்டு நிறைவு வருகின்றது. இதனை ஒட்டி நேபாளில் வாழும் அகதிகள் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் போராட்டங்களின்போதும் இரண்டு பேர் தீக்குளித்து மாண்டனர். சீனத் தூதரகம் மற்றும் முக்கியக் கட்டிடங்களின் அருகே இவர்களின் ஆர்ப்பாட்டத்தை நடத்த நேபாள் அரசு அனுமதிப்பதில்லை. நட்பு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க நேபாள் அரசு விரும்பாததே இதற்குக் காரணமாகும்.

சீனாவும் இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துமாறு நேபாள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும். கடந்த காலத்தில் சீனத் தூதரகத்தை முற்றுகையிடவும் திபெத்தியர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுவாக எதிர்ப்பாளர்கள் அந்தப் பகுதியில் இருந்து நீக்கப்பட்டு சில மணி நேரம் தடுத்து வைக்கப்படுவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டு திபெத்தியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு நேபாள் நாட்டு காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீக்குளிப்பு முயற்சிகளையும் தடுக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் கேசி கணேஷ் தெரிவித்துள்ளார்.

Thursday, 27 February 2014

2 இந்திய அமெரிக்கர்களுக்கு உலகப் புகழ்பெற்ற ஹெயின்ஸ் விருது

உலகப் புகழ்பெற்ற ஹெயின்ஸ் விருது கலை, சூற்றுச்சூழல், பொதுக் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணமும், அமெரிக்க செனட்டர் ஜான் ஹெயின்ஸ்-ன் உருவம் பொறித்த பதக்கமும் வழங்கப்படுகிறது.


அந்த வகையில் 19-வது ஹெயின்ஸ் விருது வழங்கும் விழா, வரும் ஏப்ரல் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்படும் ஹெயின்ஸ் விருதுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் சஞ்சீவ் அரோரா ஆகிய இருவர் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பெற்ற சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என்பதற்காக ஸ்டான்போர்டை சேர்ந்த ஆப்ரகாம் வர்கீஸ்க்கும், வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பம் மூலம் சமூக சுகாதார மையம் அமைப்பதில் புரட்சியை ஏற்படுத்திய அல்பூகெர்க் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் அரோராவுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருது முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜான் ஹெயின்ஸ் நினைவாக ஹெயின்ஸ் குடும்ப அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Wednesday, 26 February 2014

உக்ரைன் பிரிவினை கருத்துக்கு அமெரிக்கா-இங்கிலாந்து மறுப்பு

உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யனுகோவிச் பதவியிறக்கம் செய்யப்பட்டது பனிப்போர் காலத்திய கிழக்கு, மேற்கு பிரிவினைகளை வெளிப்படுத்தியது என்ற தகவலை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுமே நேற்று மறுத்துள்ளன.


ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் உள்ள அதிகார யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களின் வெளிப்பாடே உக்ரைனில் காணப்படும் அரசியல் நிலைமை என்பதை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலரான வில்லியம் ஹேகும் நிராகரித்தனர்.

மேலும், உக்ரைனின் மக்கள் அமைதியாக தங்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து அந்நாட்டிற்கு உதவ வேண்டும் என்று இருவருமே வலியுறுத்தினர். ஜனநாயக அரசிற்கான தங்களுடைய விருப்பங்களை வெளிப்படையாகப் பேசிய உக்ரைன் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய கடமைப்பட்டுள்ளதாக ஜான் கெர்ரி கூறினார்.

இது கிழக்கு, மேற்கு நாடுகளுக்கான பூஜ்ய வட்ட விளையாட்டு அல்ல. மேலும், உக்ரைனின் தற்போதைய நிலவரம் ரஷ்யா, அமெரிக்கா போன்ற எந்த நாடுகளின் தேர்வும் அல்ல. இது முழுக்க, முழுக்க உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காகச் செயல்படுவது ஆகும். இன்று முதல் அமைதியான தீர்வு கிடைக்க அனைவருமே இணைந்து பணி புரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹேகும் இந்த கருத்துகளுக்கு ஒத்த கருத்துகளையே வெளியிட்டார். பாலியல் வன்முறை குறித்த ஒரு அரசுத்துறை கருத்தரங்கில் பேச வந்த இருவரும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான உக்ரைனை மேற்கத்திய அல்லது ரஷ்ய சார்பு பகுதிகளாகப் பிரிக்க தங்கள் நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

Tuesday, 25 February 2014

5 ஆயிரம் ஊழியர்களை நீக்க குவான்டாஸ் விமான நிறுவனம் முடிவு?

பிரபல ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவான்டாஸ், சமீப காலமாக விமான எரிபொருள் செலவு உயர்வு, மானியம் பெறுவதில் விமான நிறுவனங்களுக்கிடையேயான கடுமையான போட்டி ஆகியவற்றின் காரணமாக கடனில் சிக்கித்தவித்து வருகிறது.


இந்நிலையில், குவான்டாஸ் நிறுவனம் தனது இடைக்கால நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டடுள்ளதாக இதில் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் குவான்டாஸ் நிறுவனம் தன்னுடைய செலவுகளை சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவிற்கு குறைக்கவிருப்பதால் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை நீக்க வாய்ப்புள்ளதாக சிட்னியை சேர்ந்த செய்தி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்நிறுவனம் இந்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

Monday, 24 February 2014

ஜப்பான் தீவில் மீண்டும் சீன கப்பல்கள் புகுந்தன: அமெரிக்கா கண்டனம்

ஜப்பான் மேற்கு பகுதியில் சென்காஸ் என்ற தீவு கூட்டம் உள்ளது. இவை ஜப்பானுக்கு சொந்தமானதாகும். இந்த தீவுகள் தங்களுக்கு தான் சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு ஜப்பான் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனால் ஜப்பானை மிரட்டும் வகையில் சீனா அடிக்கடி தனது போர் கப்பல்களை அந்த தீவு பகுதிக்கு அனுப்பி வருகிறது.


இந்த நிலையில் நேற்று மீண்டும் 3 போர் கப்பல்களை சீனா தீவு பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது. அந்த போர் கப்பல்கள் தீவுக்கு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. சீனா மீண்டும் போர் கப்பல்களை அனுப்பி வைத்ததற்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்து உள்ளது

Friday, 21 February 2014

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய அமைப்புகளை தாக்க பாகிஸ்தான் ஆதரவு படைகள் முயற்சி

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆதரவுப்படைகள் இவ்வாண்டு இறுதியில் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய பின், அங்கு தங்கியுள்ள இந்திய அமைப்புகளை தாக்குவதற்கு பாகிஸ்தான் ஆதரவு படைகள் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பற்பல முதலீடுகள் போன்றவை நன்கு செயல்பட்டு கொண்டிருப்பதால், இந்தியா தனது பாதுகாப்பு படைகளை அங்கு அனுப்பி வைத்தால் பாகிஸ்தான் ஆதரவு படைகளின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மேலும் ஈரான் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் நாட்டுடன் போர் ஏற்படுவதை தவிர்க்க ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா தனது முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்முயற்சியில் இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இணைந்து செயல்படவேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான ஹக்கானி, காபூலில் தாக்குதலை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“இங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் பயங்கர ஆயுதங்களை வழங்க இருப்பதாகவும் எல்லைப்பகுதியில் இந்த ஆயுத பரிமாற்றம் நடைபெறலாம்” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 20 February 2014

'வாட்ஸ்அப்’-ஐ 16 பில்லியன் டாலர்களுக்கு ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் வாங்குகிறது

காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.


செல்போன்’, எதிர்முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸ்அப்’ என்ற அப்ளிகேஷன் (மென்பொருள்) இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸ்அப்’-ஐ பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி பலன் அடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் 'வாட்ஸ்அப்’க்கு கூடி வரும் மவுசை கண்டு பலரும் வியந்து வரும் நிலையில், நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்த்த புதிய தூதுவனாக கருதப்படும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வாங்க முன்வந்துள்ளது.

இந்த தொகையில் 4 பில்லியன் டாலர்களை ரொக்கமாகவும், 12 பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாக தெரிகிறது.

Wednesday, 19 February 2014

பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

 இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘ரொபோடிக் டெலஸ்கோப்’’ மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Tuesday, 18 February 2014

எம்.பி.க்களின் கடும் அமளிக்கிடையே தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் கடும் அமளி செய்தனர். மிளகுப்பொடி வீசப்பட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.


இதையடுத்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க.வின் உதவியை காங்கிரஸ் தலைவர்கள் நாடினார்கள். அப்போது தெலுங்கானா மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும், சீமாந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக்கொண்டதுபோல இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் கோஷமிட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, தெலுங்கானா மசோதா மீது எம்.பி.க்கள் கருத்தை கேட்கவும், விவாதம் நடத்தவும் பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, எம்.பி.க்கள் ஏற்கனவே கூறியுள்ள சுமார் 67 திருத்தங்களை செய்ய மத்திய அரசு முன்வந்தது. திருத்தங்களுடன் கூடிய மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது.

அப்போது சீமாந்திரா மக்களின் கவலைகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தியது. இதற்கு பதிலளித்த உள்துறை மந்திரி ஷிண்டே, சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.க்கள் அவைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை சபை காவலர்கள் வெளியேற்றினர்.

இந்த அமளிக்கிடையே மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. இதனால் திருத்தங்களுடன் கூடிய தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மக்களவையின் கதவுகள் மற்றும் பார்வையாளர் கேலரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday, 17 February 2014

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது

வடக்கு பிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக எந்த விவரமும் வெளியாகவில்லை.
அந்நாட்டின் தலைமை நில அதிர்வு நிபுணரான ரெனட்டோ சொலிடம் இது குறித்து கூறுகையில், நாட்டின் முக்கிய தீவான லுசானின் வடக்கு கடற்கரை பகுதியில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது என்றார். இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அந்நாட்டில் கடந்த அக்டோபர் 15ந் தேதி நிகழ்ந்த 7.1 ரிக்டர் அளவுள்ள பூகம்பத்தால் 200 பேர் பலியானதுடன், சர்ச்சுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. எரிமலைகளின் தாக்கத்தால் உருவான தீவுப்பகுதியான பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையமாக காணப்படுவதுடன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகவும் அறியப்படுகிறது.

Friday, 14 February 2014

பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்த இந்திய விஞ்ஞானி

கடைகளில் விற்பனை செய்யும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வழங்கப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் பைகள் கழிவு பொருட்களாக குப்பையில் வீசப்படுகிறது.


பின்னர் அது மக்கா குப்பை ஆகி தீ வைத்து எரித்து வீணாக்கப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.

அவரது பெயர் பிரஜேந்திர குமார் ஷர்மா. அமெரிக்க வாழ் இந்தயரான இவர் இல்லினாய்ஸ் ஆய்வு மையத்தில் விஞ்ஞானி ஆக பணிபுரிகிறார்.இவர் ‘பைரோலிசிஸ்’ முறையில் பிளாஸ்டிக் பைகளை எரித்து இதில் இருந்து 30 முதல் 50 சதவீதம் கச்சா எண்ணையை எடுத்து டீசல் தயாரித்துள்ளார்.
டீசல் மட்டுமின்றி இயற்கை எரிவாயு, நாப்தா, கேசோலின், மெழுகு, உராய்வு ஆயில் உள்ளிட்டவற்றையும் தயாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Thursday, 13 February 2014

சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலன் தொழில்நுட்ப கோளாறால் செயலிழந்தது


சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புதிய முயற்சியாக சந்திரனுக்கு ‘ஜாட் ரேபிட்’ (யூது) என்ற விண்கலத்தை அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் சென்று தரை இறங்கியது.


இதன் மூலம் சந்திரனில் விண்கலத்தை சேதம் இன்றி தரையிறக்கிய 3–வது நாடு என்ற பெருமையை சீனா அடைந்தது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளே விண்கலத்தை தரை இறக்கி இருந்தது.

நிலவின் மேற்பரப்பு மற்றும் அங்கு இருக்கும் இயற்கை வளங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வுக்கலன் அனுப்பப்பட்டது. சந்திரனில் தரை இறங்கிய ஆய்வுக்கலன் சுமார் 9 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்று அந்த காட்சிகள் கொண்ட படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஆய்வுக்கலனில் இயந்திர கட்டுப்பாட்டில் கோளாறு ஏற்பட்டதால் சரியாக இயங்கவில்லை. முற்றிலும் செயலிழந்து விட்டதால் ஆய்வுக்கலனை சரி செய்ய முடியாது என சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Wednesday, 12 February 2014

ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்: இங்கிலாந்து உறுதி

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்தன.


அதை தொடர்ந்து ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 2 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக 3–வது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கு வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கிலாந்து அரசு உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.இந்த தகவலை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Tuesday, 11 February 2014

இன்றும் கூட தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன்: உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் விளக்கம்


உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.


இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், ‘இன்றும் கூட தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Monday, 10 February 2014

லாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்க முடியாது: மத்திய நிதி மந்திரி


சம்பள உயர்வை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து கூறியதாவது:-

லாபம் அனைத்தையும் பங்குகளுக்கான ஆதாயம் வழங்கவும், வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்கவும் பயன்படுத்த முடியாது.

லாபத்தின் குறிப்பிட்ட தொகை வங்கிகளுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை அதிகரிப்பதற்கும், வங்கிகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.மூலதனம் இருந்தால் மட்டுமே வங்கிகள் தங்கள் பங்குதாரர்களுக்கு பங்காதாயங்களை வழங்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50,000 கிளைகளில் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 7 February 2014

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை: நிதி அமைச்சகம்


சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 88.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.


இதையடுத்து மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது 50 பில்லியன் டாலராக குறைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிதி அமைச்சகத்திற்கு தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த நிதியாண்டின் (மார்ச்) இறுதிக்குள் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது இருக்கும் அளவில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என நிதித்துறை இணை மந்திரி ஜெ.டி. சீலம் மக்களவையில் தெரிவித்தார்.

Thursday, 6 February 2014

டெல்லியில் தனியார் மின் நிறுவனங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றார் கெஜ்ரிவால்


டெல்லி மாநிலத்திற்கு அங்குள்ள தனியார் மின் நிறுவனங்களே மின்சாரத்தை வழங்கி வந்தன. அங்கு மின் கட்டணங்கள் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் மின் கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.


அக்கட்சி ஆட்சி அமைத்தவுடன் தாங்கள் கூறியது போலவே மின் கட்டணத்தை 50 சதவிகிதம் வரை குறைத்து உத்தரவிட்டது. ஆனால் டெல்லி அரசுக்கு மின்சாரம் வழங்கும் அனில் அம்பானிக்கு சொந்தமான இரு தனியார் மின் நிறுவனங்கள் 8 சதவிகித அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்யும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக தங்கள் அரசுக்கு உதவுமாறு அக்கட்சி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் மீது கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Wednesday, 5 February 2014

ஹாலிவுட் நடிகர் மரணம் எதிரொலி: நியூயார்க்கின் பிரபல ஹெராயின் வியாபாரிகள் சுற்றி வளைப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.


அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட ஹாப்மேன் அப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவரை பற்றிக் கொண்ட போதை அரக்கனிடம் இருந்து அவரால் மீள முடியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாப்மேன் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் அவர்  மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, மறைந்த ஹாப்மேனின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த எண்கள், அவரது இ-மெயில் தொடர்புகள் ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்த நியூயார்க் நகர போலீசார், அவற்றின் அடிப்படையில் பிரபல ஹெராயின் மொத்த வியாபாரிகள் 4 பேரின் ரகசிய இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஏராளமான போதைப் பொருட்களும், இதர வியாபாரிகள் தொடர்பான விபரங்களும் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Tuesday, 4 February 2014

உலகம் முழுவதும் பெருகிவரும் புற்றுநோய்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

உலகம் முழுவதும் மக்களிடம் அலை அலையாய் புற்றுநோய் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக புற்றுநோய் மக்களை பாதிக்காமல் இருக்க மது மற்றும் சர்க்கரை உபயோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.


2035ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 24 மில்லியனை எட்ட வாய்ப்புள்ள நிலையில் முறையான நடவடிக்கை எடுத்தால் அதை பாதியாக குறைக்க முடியும் என சுகாதார மையம் தெரிவித்துள்ளது. புற்றுநோயை தடுக்கும் நோக்கில் புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதே தற்போது உலகின் முன் உள்ள உண்மையான தேவையாகும் என மையம் கூறியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனை எட்டியுள்ள நிலையில் 2025ல் அது 19 மில்லியனாகவும், 2030ல் 22 மில்லியனாகவும், 2035ல் 24 மில்லியனாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

Monday, 3 February 2014

93 வயதில் கின்னஸ் சாதனை படைத்த யோகா ஆசிரியை

கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தும் 93 வயது அமெரிக்கப் பெண், ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.


சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

இதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.

மேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.

எனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசானத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் 'வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம்' என்ற பள்ளியை தொடங்கினார்.

கடந்த 70 ஆண்டு காலமாக இடைவிடாது யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், தற்போது தனது 93-வது வயதிலும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, யோகாசனம் தொடர்பான கருத்தரங்கங்களில் துடிப்புடன் பங்கேற்கிறார்.

யோகாசன கலையைப் பற்றிய நுணுக்கங்களை தனது சொற்பொழிவு மற்றும் செய்முறை விளக்கங்களின் வாயிலாக இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்தும் வருகிறார்.

யோகா கலையின் மீது இளம்வயதில் இவர் கொண்ட தீராத காதலை ‘கின்னஸ்’ புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற வகையில் டாவோ பொர்ச்சான் லின்ச்-சின் பெயர் கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Thursday, 30 January 2014

மோட்டரோலா மொபைல் போன் தொழிலை லெனோவாவுக்கு விற்க கூகுள் ஒப்புதல்

கூகுள் தனது மொபைல் தொழில்நுட்ப கம்பெனியான மோட்டரோலாவை லெனோவாவிடம் 2.9 பில்லியன் டாலருக்கு விற்க முடிவு செய்து இரு நிறுவனங்களுக்கிடேயே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.


நேற்று வெளியான இத்தகவல் மூலம் கூகுளுக்கு இருந்த நிதி தொடர்பான தலைவலி முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2012ல் 12.4 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் வாங்கிய மோட்டரோலா கம்பெனியின் வர்த்தகம் குறுகிய காலத்திலேயே 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏறத்தாழ 20000 பேர் வேலை செய்த கம்பெனியில் தற்போது 3800 பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் மோட்டரோலாவின் மொபைல் காப்புரிமையை அது தன்னகத்தே நிறுத்திக்கொண்டுள்ளது. இந்த காப்புரிமையை பயன்படுத்தி ஆண்டிராய்ட் மென்பொருளையும், டேப்லட் கம்ப்யூட்டர்களையும் உருவாக்க முடியும். இதை மனதில் வைத்தே 15 ஆண்டுகளாக வளைதள பிரிவில் முத்திரை பதித்து வரும் கூகுள், மோட்டரோலாவை லெனோவாவிற்கு விற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Wednesday, 29 January 2014

புதுவையில் காங்கிரசார் சாலை மறியல்–கடையடைப்பு

புதுவையில் மத்திய மந்திரி நாரயாணசாமி வீட்டில் கிடந்த பைப் வெடிகுண்டை போலீசார் கைப்பற்றினார்கள்.இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் சட்டசபை எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் மத்திய மந்திரி நாராயணசாமி வீட்டு முன்பு திரண்டனர்.


பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக அண்ணாசிலைக்கு வந்தனர். மத்திய மந்திரி நாராயணசாமி வீட்டு முன்பு பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் அண்ணா சிலையை சுற்றி 4 ரோட்டிலும் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையொட்டி அண்ணா சாலை மற்றும் புஸ்சி வீதியில் கடைகள் அடைக்கப்பட்டன. இது பற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சட்டசபை எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வெடிகுண்டு வைத்தவர்களை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

இதனை ஏற்று காங்கிரசார் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தை காங்கிரசார் கைவிட்டாலும் தொடர்ந்து மத்திய மந்திரி நாரயாணசாமி வீட்டு முன்பு குழுமி இருந்தனர்.

Tuesday, 28 January 2014

மாநிலங்களவை தேர்தல்: தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகிறார்கள்

டெல்லி மேல்-சபைக்கு தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.


அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே. ரெங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.

மேல்– சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21–ந்தேதி தொடங்கியது. முதல் நாளே தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ் ஆகிய 4 பேரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ரங்கராஜனும் நேற்று தனது மனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது.

மேல்– சபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் மனு பரிசீலனை போது அது நிராகரிக்கப்படும்.

இதனால் மேல்– சபை தேர்தலில் போட்டி இருக்காது. தற்போது மனு செய்துள்ள 4 அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஒரு தி.மு.க. வேட்பாளர், ஒரு மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஆகிய 6 பேரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டு விடுவார்கள்.